ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஹைலைட்ஸ்:
TMB வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு.
விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 10, 2022.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB BANK), தூத்துக்குடியில் காலியாக உள்ள பல்வேறு நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 10 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
வேலை வாய்ப்புக்கான முழு விவரம்:
நிறுவனம் - மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB).
பதவி பெயர் - நிர்வாக இயக்குனர்.
வேலை வகை - மத்திய அரசு வேலை.
பணியிடம் - தூத்துக்குடி.
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்.
அதிகாரப்பூர்வ இணையதளம் - https://www.tmbnet.in
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.05.2022.கல்வி தகுதி:
நிர்வாக இயக்குனர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தலைமைப் பொது மேலாளர் / பொது மேலாளர் கேடரில் அல்லது அதற்கு மேல் ஏதேனும் ஒரு கொமர்ஷல் வங்கியில் பணிபுரிந்து அல்லது ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு, மார்ச் 31, 2022 நிலவரப்படி 62 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அத்துடன் நல்ல ஸ்ப்ரிட்டுடன் பணிபுரிபவராக இருக்க வேண்டும். மேலும், இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர் முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tmbnet.in ஐப் பார்வையிட வேண்டும்.
TMB வங்கி வேலைகள் அல்லது சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.
மேனேஜிங் டைரக்டர் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.
நிர்வாக இயக்குநர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
TMB வங்கி ஆன்லைன் விண்ணப்பப் படிவ இணைப்பைக் கண்டறியவும்.
உங்கள் விவரங்களுடன் ஒரு கணக்கை உருவாக்கி விண்ணப்பத்தை நிரப்பவும்.
தேவைப்பட்டால் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்திய பின், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Post a Comment