TNPSC என்றால் என்ன?... குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது? - முழு விவரம் இங்கே!
TNPSC குரூப் 4 தேர்வு என்றால் என்ன?.... குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பதற்கான முழு விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ஹைலைட்ஸ்:குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பம்.
VAO, JA என 7,301 பணியிடங்களுக்கு ஜூலை 24 எழுத்துத் தேர்வு.
தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு (TNPSC Group 4) இதுவரை சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதில், ஆண் விண்ணப்பதாரர்கள் சுமார் 9,26,583 பேரும், பெண் விண்ணப்பதாரர் 12,58,616 பேரும், 129 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவார்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 21.85 லட்சம் விண்ணப்பதாரகளில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், TNPSC குரூப் 4 தேர்வு என்றால் என்ன?.... குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பதற்கான முழு விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
TNPSC என்றால் என்ன?
டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசுப் பணிக்குத் (TNPSC Group IV) தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். அரசுப்பணியாளர் தேர்வாணையம் (PSC – Public Service Commission) இந்திய அரசால் 1929 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தந்த மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
TNPSC-க்கு நான்கு தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளன. அவை குழு 1, குழு 2, குழு 3 மற்றும் குழு 4. இதை தவிர குழு 5,6,7,8 தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அவை நேர்காணல் இடுகை மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறினால் குரூப் 2 மற்றும் 2A ஆகும்.
குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது? - TNPSC Group IV Exam
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
பில் கலெக்டர்.
தட்டச்சு செய்பவர்.
ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
கள ஆய்வாளர்
வரைவாளர்.
குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) மேலே குறிப்பிட்டுள்ள 6 அரசு துறை பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29 PSC தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வின் நேரம் மற்றும் தேர்வுக்கான தேதி மாநிலங்களுக்கு ஏற்றார் போல மாறுபடும்.
இந்தியாவில் முக்கியமாக 2 வகையான PSC தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்று UPSC, அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய அரசு தேர்வு. மற்றொன்று, PSC - அதாவது பொது சேவை ஆணையம் தேர்வு ஆகும்.

Post a Comment

Previous Post Next Post