TNPSC Group 4: குரூப் 4 பொதுத்தமிழ் தேர்வுக்கான வினா, விடை இங்கே! 
குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.  
ஹைலைட்ஸ்:குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பம்.
VAO, JA என 7,301 பணியிடங்களுக்கு ஜூலை 24 எழுத்துத் தேர்வு.
தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4) விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 21.85 லட்சம் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் (tnpsc group 4 syllabus 2022) சில முக்கியமான கேள்வி பதில்களை உங்களுக்கு நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றை இங்கே காணலாம்...
1. விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

(A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
(E) விடை தெரியவில்லை

விடை: (A)
2. “உயிரும் உடலும் போல” உவமை கூறும் பொருள் தெளிக.


(A) ஒற்றுமை
(B) வேற்றுமை
(C) அன்பு
(D) பகை
(E) விடை தெரியவில்லை 
விடை: (A)

3. தவறான கலைச் சொல்லைக் கண்டறிக.

(A) Leadership - தலைமைப் பண்பு
(B) Member of Legislative Assembly - சட்டமன்ற உறுப்பினர்

(C) Punctuation - விழிப்புணர்வு
(D) Equestrian - குதிரை யேற்றம்
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

4. விடை வகைகள் "தேர்வு எழுதி விட்டாயா?” என்ற வினாவிற்கு “எழுதாமல் இருப்பேனா?” என்று கூறுவது

(A) உற்றது உரைத்தல் விடை
(B) வினா எதிர் வினாதல் விடை
(C) உறுவது கூறல் விடை
(D) வெளிப்படை விடை
(E) விடை தெரியவில்லை
 
விடை: (B)

5. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
நாகப்பட்டினம் என்பதன் மரூஉ

(A) நாகப்பட்டினம்
(B) நாகை
(C) நாகூர்
(D) பட்டினம்
(E) விடை தெரியவில்லை

விடை: (B)


6. நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)

(A) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்
(B) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை, வெளியிடும் இடங்களில், வியப்புக்குறி இட வேண்டும்
(C) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்பு குறி இட வேண்டும்
(D) மகிழ்ச்சி வியப்பு அச்சம், அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்பு குறி இட வேண்டும்
(E) விடை தெரியவில்லை

விடை: (A) 

7.சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக :

புளியங் ____________________

(A) கன்று
(B) குருத்து
(C) பிள்ளை
(D) மடலி
(E) விடை தெரியவில்லை

விடை: (A)

8. மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான்.
தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்.

(A) நிகழ்காலம்

(B) இறந்தகாலம்
(C) எதிர்காலம்
(D) சங்ககாலம்
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

9. பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு : வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்

(A) ஏறினர்
(B) வளவனும் தங்கையும்
(C) பேருந்து
(D) மாநகரம்
(E) விடை தெரியவில்லை


விடை: (D)

10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (முழை)

(A) சிங்கம்______யில் வாழும்
(B) பறவை______யில் வாழும்
(C) யானை______யில் வாழும்
(D) எலி ______யில் வாழும்
(E) விடை தெரியவில்லை

விடை: (A) 

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் (tnpsc group 4 syllabus 2021 in tamil) மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 &2A, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.

Post a Comment

Previous Post Next Post