பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2022
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: விருந்தோம்பல்
குறள் : 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள்:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
பழமொழி :
Strength grows stronger by being tied.
ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
பிரச்சினைகள் இல்லாவிட்டால், நம்மில் பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக இருப்போம். --ஜிக் ஜிக்லர்
பொது அறிவு :
1. மிகவும் கனமான மூளை உள்ள விலங்கு எது ?
திமிங்கலம்.
2. பாலில் காணப்படும் சர்க்கரையின் பெயர் என்ன ?
லாக்டோஸ்.
English words & meanings :
eye - sight organ. noun. கண். பெயர்ச் சொல். I - first person. pronoun. நான். பிரதி பெயர்
ஆரோக்ய வாழ்வு :
இனிப்புச் சுவை அதிகம் கொண்ட கொய்யா பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ, ஆக்சிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதேபோல கொய்யாவின் இலைகளிலும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இவை கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது வரை ஏராளமான பயன்களை கொண்டது.
NMMS Q
கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் பொருத்தமற்றதாக அமையும் வார்த்தை:
a) கன்னியாகுமரி b) கோயம்புத்தூர் c) திருநெல்வேலி d) தூத்துக்குடி.
விடை : கோயம்புத்தூர்
விளக்கம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடல் உள்ளது. கோயம்புத்தூரில் கடல் இல்லை. எனவே இது பொருத்தமற்றதாக அமையும்.
நீதிக்கதை
அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்
இன்றைய செய்திகள்
19.12.22
* பள்ளி மாணவர்களுக்காக 'நம்ம ஸ்கூல்'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
* கோவையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிசம்பர்
17 ல் கலைத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டாரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாற்று திறனாளி மாணவன் நடனம் அனைவரின் பாராட்டும் பெற்றது.
* மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
* மும்பை: ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல்,இந்திய
கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலை,பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்!.. இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை
* சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
*புரோ கபடி 9வது லீக் இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர்- அணி வெற்றி பெற்றது.
* உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி பெற்றது. இது இவர்கள் பெறும் 3- வது உலகக்கோப்பை ஆகும். அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி சாம்பியன் பட்டம் பெற்றார்.
Today's Headlines
* Chief Minister M. K. Stalin will inaugurate 'Namma School' for school students today.
* December on behalf of School Education Department in Coimbatore
An art festival was held on 17 In this event, the dance of a differently-abled student studying in class 7 in Pudur Panchayat Union Middle School of Thondamuthur district won the appreciation of all.
* The facility of booking tickets through WhatsApp from home to travel in metro trains will soon be introduced.
* Mumbai: Warship INS Marmagova, India
Joined the Navy. The Defense Minister dedicated this ship to the country!.. 75 percent of the equipment used in this ship is locally manufactured.
* India won the first Test cricket match against Bangladesh in Chattogram. India have taken a 1-0 lead in the 2-match Test series.
* Jaipur- team won the Pro Kabaddi 9th League final.
* Argentina won the FIFA World Cup in penalty shots.It was their 3rd FIFA title. Messi became the world Champion.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Post a Comment