உதவித்தொகையுடன் AI-யில் PG பண்ணலாம்... எங்கு.... எப்படி விண்ணப்பிப்பது?
இந்த படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி தேதி ஆகும்.
ஹைலைட்ஸ்:
ஜியோ இன்ஸ்டிடியூட் புதிய PG படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
விருப்பம் உள்ள பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 ஆகும்.
ஜியோ இன்ஸ்டிடியூட் (Jio Institute), ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் டிஜிட்டல் மீடியா & மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய துறைகளில் ஒரு வருட முழுநேர முதுகலை பட்டபடிப்புக்களை (full-time post graduate programmes) அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி தேதி ஆகும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் (AI&DS) PG படிப்பை துவங்கியதில் நோக்கம் சமூகம் மற்றும் தொழில்களுக்கான நடைமுறை தீர்வுகளை உருவாக்குவதாகும். அதே நேரத்தில், டிஜிட்டல் மீடியா மற்றும் மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் (டிஎம் & எம்சி) பாடநெறி, டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர் அனுபவத்தை சிறப்பாக நிர்வகிக்கும் அறிவை வளர்க்க மாணவர்களுக்கு உதவும். நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்னெவென்றால், இந்த படிப்புகளின் நோக்கம் வளர்ந்து வரும் துறையில் புதிய வேலைகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துவதாகும்.
AI & DS திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கணினி அறிவியல் அல்லது IT அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் அல்லது பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலை மட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு படிப்பையாவது முடித்திருக்க வேண்டும். அதே நேரத்தில் DM & MC வேட்பாளர்கள் குறைந்தபட்சம் மூன்று வருட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களுக்கும், ஒருவர் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% அல்லது அதற்கு சமமான CGPA ஐப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஜூலை 1, 2022 இன்படி குறைந்தபட்சம் 18 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில், www.jioinstitute.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். முகப்பு பக்கத்தில் உள்ள 'APPLY NOW' என்பதை கிளிக் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். பின்னர், விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 2,500 செலுத்த வேண்டும். மேலும், ஆன்லைன் ஜியோ இன்ஸ்டிடியூட் நுழைவுத் தேர்வில் (JET) தேர்ச்சி பெறுவது முக்கியம்.
இந்த தேர்வானது, அளவு திறன் மற்றும் வாய்மொழித் திறன் மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு கடந்தகால கல்விப் பதிவு, கட்டுரை கேள்விகளுக்கான பதில்கள், நோக்க அறிக்கை, பரிந்துரை கடிதங்கள், பணி அனுபவத்தின் பொருத்தம், பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், விருதுகள் மற்றும் பாராட்டுகள், JET மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.
அதுமட்டுமின்றி தரமான உயர்கல்வியைத் தொடர வழி இல்லாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க, ஜியோ இன்ஸ்டிடியூட் கல்விக் கட்டணத்தில் 100% வரை உதவித்தொகையையும் வழங்கும். தனிப்பட்ட தேவைகளின் மதிப்பாய்வு மற்றும் அணுகல், சேர்த்தல், பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றில் ஜியோ நிறுவனத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், சர்வதேச விண்ணப்பதாரர்கள், சிறப்புத் திறனாளிகள் போன்றவர்களுக்கு கணிசமான எண்ணிக்கையிலான உதவித்தொகைகள் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post