TCS | டிசிஎஸ் நிறுவனத்தில் எம்பிஏ மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு.
இந்தியாவின் புகழ்பெற்ற டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் (TCS) எம்பிஏ பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் உடனடியாக விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 28 வயது வரை உள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று, வேலை தேடும் இளைஞர்கள் தாராளமாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: Marketing / Finance / Operations / Supply Chain Management / Information Technology ஆகிய பிரிவுகளில் முழுநேர MBA/MMS/ PGDBA/PGDM/ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பி.இ, பி.டெக், பிண்ணனி கொண்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 10, 12 மற்றும் பட்டப்படிப்புகளில் 60% சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை பணி அனுவபம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
திறந்தநிலைப் பள்ளியில் உயர்கல்வி முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்த் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இரண்டு நிலைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 1 . எழுத்துத் தேர்வு 2. நேர்காணல் தேர்வு.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tcs.com/careers/tcs-off-campus-hiring ' TCS Next Step Portal' எனும் லிங்கை கிளிக் செய்யவும்.
ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.
TCS Next Step Portal-ல் விண்ணப்பத்தார்கள் தங்களது கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தெளிவுரை வேண்டுவோர்:
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 18002093111 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ilp.support@tcs.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

Post a Comment

Previous Post Next Post