TNPSC அலுவகத்தில் பல்வேறு காலிப்பணியிடம் அறிவிப்பு... எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறநிலையத்துறை கீழ்நிலைப் பணியில் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை TNPSC வரவேற்கிறது.
ஹைலைட்ஸ்:TNPSC அலுவலகத்தில் பணிபுரிய செம்ம வாய்ப்பு.
மொத்தம் 18 காலிப்பணியிடம் அறிவிப்பு.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 18 ஆகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறநிலையத்துறை கீழ்நிலைப் பணியில் உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தை இன்று (மே 20) முதல் ஜூன் 18 ஆம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான (TNPSC Recruitment 2022) எழுத்துத் தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும். இது குறித்த மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவலை பார்வையிடவும்.
காலியிட விவரம்:
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் காலியாக உள்ள மொத்தம் 36 நிர்வாக அதிகாரி பதவிகள் நிரப்படும்.
தகுதி:
இப்பதவிகளுக்கு (TNPSC Executive Officer Recruitment 2022) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இதர விவரங்களுக்கு TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட https://tnpsc.gov.in/Document/english/12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம்:
நிர்வாக அதிகாரி பதிவுக்கு (tnpsc notification) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 150 மற்றும் பூர்வாங்க தேர்வுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://tnpsc.gov.in/Document/english/13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf செய்யவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் விண்ணப்பதாரர் TNPSC இணையதளத்தை tnpsc.gov.in பார்க்கவும்.
பதிவுசெய்து, பதிவு/உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க, ‘புதிய பயனர்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
முகப்புப் பக்கத்திற்குத் திரும்பி, https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்பதற்குச் செல்லவும்.
நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து, பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
ஆவணங்களைப் பதிவேற்றவும் மற்றும் கட்டணம் செலுத்தவும்.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து அதன் நகலைப் பதிவிறக்கவும்.
இல்லையெனில், விண்ணப்பதாரர் https://apply.tnpscexams.in/ செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான யாரடி இணைப்பை பெறலாம்.

Post a Comment

Previous Post Next Post